தகப்பனின் அன்பு

தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார். – நீதிமொழிகள் 3:12

நம் கர்த்தரின் அன்பு, ஒரு தகப்பனின் அன்போடு ஒப்பிடப்படுகிறது. ஒரு நல்ல தகப்பன் தன் பிள்ளைக்குத் தேவையானதைத் தருவார். அதிலே சிட்சையும் அடங்கும். ”தண்டனை” அல்ல, சிட்சை.

1. ஒரு தகப்பன் தன் பிள்ளையை சந்தோஷமாய்ச் சிட்சிக்கிறது இல்லை. அதேப்போல் கர்த்தர் நம்மை மனப்பூர்வமாய் சஞ்சலப்படுத்துகிறது இல்லை. நமக்காகப் பரிதாபப்பட்டு, மனதுருகி, வேறு வழி இல்லாததினால், சிட்சிக்கிறவர் தான் நம் தேவன். ஆகவே, அவர் நம்மை சிட்சிக்கும்போது, நம் மனதில் அவருடைய அன்பையும், மனதுருக்கத்தையும், இரக்கத்தையும், கிருபையையும் நினைத்துக்கொள்வோம்.

2. ஒரு தகப்பன் தன் பிள்ளையை அன்போடு சிட்சிப்பானே அல்லாமல், கொடூரமாய்ச் சிட்சிக்க மாட்டான். நம் கர்த்தரும் நம்மை ஒருநாளும் கொடுமைப்படுத்த மாட்டார். சிற்சில வேளைகளில் நம் திராணிக்கு மீறி அவர் சிட்சிக்கிறதுபோல, நம் பாவங்களைக் காட்டிலும் அவர் கொடுக்கிற சிட்சை அதிகமாய் இருக்கிறதுபோலும் தெரியும். ஆனால் எல்லாவற்றிலும் தேவனின் அன்பின் கரமே நம்மை சிட்சிக்கிறது என்று நாம் மறந்துவிட வேண்டாம்.

3. ஒரு தகப்பன் தன் பிள்ளையின் நலனுக்காகவே சிட்சிக்கிறான். அப்படியே நம் கர்த்தரும் நம்முடைய நலனுக்காகவே நம்மை சிட்சிக்கிறார்.

ஆகவே, கர்த்தர் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர் நம்மிடத்தில் அன்பாய் இருக்கிறார் என்று அறிந்து, கர்த்தரை மகிழ்ச்சியோடு அவரை மகிமைப்படுத்துவோம். நாம் சுத்தப்பொன்னாக விளங்கும்படி அவர் செய்வாராக. ஆமென்.

நீதி 3_12

Advertisements

மெய்ஞ்ஞானம்

கர்த்தர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்து வைத்திருக்கிறார். – நீதிமொழிகள் 2:7

இந்த வசனத்தில் நாம் தியானிக்க வேண்டிய இரண்டு காரியங்கள் உண்டு. கர்த்தர் நீதிமான்களுக்கு மெய்ஞ்ஞானத்தைத் தந்திருக்கிறார் என்று சொல்லப்படவில்லை. அவர்களுக்காக மெய்ஞ்ஞானத்தை வைத்து வைத்திருக்கிறார். நமக்கு ஞானம் வேண்டும் என்றால், அவரிடத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். இதைத்தான் யாக்கோபு சொல்கிறார்.

உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். – யாக்கோபு 1:5

அப்படியென்றால் நாம் மெய்ஞ்ஞானத்திற்காக ஜெபிக்க வேண்டும். கேட்கிறவனே பெற்றுக்கொள்வான். இந்த நாளிலே அதற்காக ஜெபிக்கலாம்.

இரண்டாவது காரியம், மெய்ஞ்ஞானமானது நீதிமான்களுக்கென்று வைக்கப்பட்டிருக்கிறது. நாம் கல்வாரி சிலுவையண்டையில் வந்து, கிறிஸ்து இயேசுவையே நம் இரட்சகராய் ஏற்றுக்கொள்ளும்போது, நீதிமான்கள் ஆகிறோம். ஏனென்றால் கிறிஸ்து இயேசு தாம் தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார். – 1 கொரி. 1:31

ஆகவே அண்டிவருவோம் நம் இயேசுவண்டை. அவரை, மெய்ஞ்ஞானத்தை, பிதாவினிடத்தில் இருந்து பெற்றுக்கொள்வோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

நீதி 2_7

செவிகொடுங்கள்

எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான். – நீதிமொழிகள் 1:33

நீதி 1_33

இந்த ஜூன் மாதம் முதல் நாளன்று கர்த்தர் சொல்லுகிறார்: எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.

நாம் அவருடைய வார்த்தைகளுக்கு செவிகொடுக்கும்போது, மூன்று காரியங்களைக் கர்த்தர் வாக்குப்பண்ணுகிறார்.

1. நீங்கள் விக்கினங்கள் இல்லாத வாழ்க்கை வாழும்படி செய்வார்.
2. ஆபத்திற்குப் பயப்படாத ஒரு வாழ்க்கை வாழ்வீர்கள். மரண இருளின் பள்ளத்தாக்கிலும், நீங்கள் பொல்லாப்புக்குப் பயப்படாதிருப்பீர்கள். சிங்கம்போல் தைரியமாய் இருப்பீர்கள்.
3. அமைதியாய் இருப்பீர்கள். எதைக் குறித்தும் மனம் சஞ்சலப்படாத வாழ்க்கை வாழ்வீர்கள்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைக்கு செவி கொடுப்போம். கர்த்தர் அப்படியே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

The LORD Himself…

The LORD Himself goes before you and will be with you; He will never leave you nor forsake you. Do not be afraid; do not be discouraged. – Deuteronomy 31:8 (NIV)

As we enter this New Year, the LORD gives this promise to us: I will go before you; I will be with you.All your troubles, problems must go through Me first. I will never leave you nor forsake you, for I AM Immanuel – God with you. Do not be afraid; do not be discouraged.

Yes, dear child of God, the Lord Himself will go before us. Jesus Christ will be with us always; He will never leave you nor forsake you. So let us not give unto fear or be discouraged. May the LORD bless us according to this promise, in this new year, through His Son and our Redeemer Jesus Christ. Amen.

Deuteronomy 31_8

கர்த்தர் தாமே…

கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம். – உபாகமம் 31:8

இந்த புதிய வருடத்திற்குள் வந்திருக்கிற நமக்கு கர்த்தர் சொல்கிறார்: நானே உனக்கு முன்பாகப் போவேன். உன் தடைகள், கோணல்கள், போராட்டங்கள் எல்லாம் என்னைத் தாண்டியே ஆகவேண்டும். நான் உன்னோடு இருப்பேன். நான் இம்மானுவேல். நான் உன்னை விட்டு விலகுவதில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. நீ பயப்பட வேண்டாம். நீ கலங்க வேண்டாம்.

ஆமென், தேவனுடைய பிள்ளையே, கர்த்தர் நமக்கு முன்பாகப் போகிறார். இயேசு நம்மோடு இருப்பார். அவர் நம்மை விட்டு விலகுவதில்லை, நம்மைக் கைவிடுவதுமில்லை. நாம் பயப்படவும் கலங்கவும் தேவையில்லை. இந்த புதிய வருடத்தில் கர்த்தர் நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நம்மையும், நம் குடும்பங்களையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

உபாகமம் 31_8

உம்மையே நம்பியிருக்கிறேன்

அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். – சங்கீதம் 143:8

என் பரலோக பிதாவே, என் தகப்பனே, அப்பா, பிதாவே, இந்த காலை நேரத்தில், எல்லாவற்றிற்கும் மேலாக உம்முடைய கிருபையை வாஞ்சிக்கிறேன். உம்முடைய குமாரனும், என் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம், நான் உம்மையே நம்பி இருக்கிறேன். இன்று உம்முடைய கிருபையை, உம்முடைய தயவை, உம்முடைய அன்பை நான் கேட்கும்படி பண்ணும், தகப்பனே! இந்த புதிய நாளில் நான் செல்ல வேண்டிய பாதையை எனக்குக் காட்டும். உமக்குப் பிரியமான வழி எது என்று எனக்குத் தெரியாது. ஆகவே, என் ஆத்துமாவை உம்மிடத்தில் உயர்த்துகிறேன். என் ஆத்துமாவைக் கண்டு என் மேல் மனமிரங்கும், என் தகப்பனே. நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும். அதில் நடக்க தேவையான கிருபையை எனக்குத் தாரும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன், என் நல்ல பிதாவே, ஆமென்.

சங்கீதம் 143_8

In You, I trust

Cause me to hear Your loving-kindness in the morning, for in You do I trust; Cause me to know the way in which I should walk, for I lift up my soul to You. – Psalm 143:8 (NKJV)

My dear Father in Heaven, this morning, I seek above everything, Your loving-kindness. Through Jesus Christ, Your Son and my Redeemer, I trust in You, my Eternal Father. May I hear Your loving-kindness, Your love, Your grace and Your favor this morning. As the day is breaking, cause me to know the way in which I should walk. For I do not know the steps I need to take. I lift my soul to You. Look at my soul, dear Father, have mercy on me, and show me the way I should walk; and give grace so that I can walk in the path that You have destined for me. Through Jesus, I ask. Amen.

Psalm 143_8