3. விசுவாசம்–நம்பப்படுகிறவைகளின் உறுதி

சில மாதங்களுக்கு முன்பு டி.வி.யில் ஒரு விளம்பரம் பார்த்தேன். அதில் இந்த வசனம் பிரபலமானது: “நம்பிக்கை தாங்க வாழ்க்கை.”

ஒரு கிறிஸ்தவனுக்கு விசுவாசம் தான் வாழ்க்கை. தன் விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான். – ஆபகூக் 2:4. அந்த விசுவாசம் என்பது உறுதியான நம்பிக்கை. ஆங்கிலத்தில் விசுவாசத்துக்கு, “faith” என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அதற்கான அர்த்தத்தை ஆங்கில அகராதிகளில் பார்த்தால், ஒரு அகராதி இப்படி சொல்கிறது: உறுதியாய் நம்பப்படுகிற ஒரு காரியம். இன்னொரு அகராதி சொல்கிறது: ஆதாரமே இல்லாமல் இருந்தாலும் அதை உறுதியாய் நம்புகிறது தான். அதனால் தான் வேதம் சொல்கிறது:
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. – எபிரேயர் 11:1.

மனுஷனாய் பிறந்த எல்லாருக்கும் வாழ்க்கையில் நம்பிக்கையும், விசுவாசமும் உண்டு. இங்கு கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றியோ, நம்பிக்கையைப் பற்றியோ நான் சொல்லவில்லை. ஆனால் எல்லாருக்கும் ஒரு நம்பிக்கையும், ஒரு விசுவாசமும் கண்டிப்பாக இருக்கிறது.

ஒரு உதாரணத்துக்கு ஒரு செய்தியைப் படிக்கிறோம். டிரைவர் குடித்துவிட்டு போதையில் வண்டி ஓட்டினதில், பஸ் கவிழ்ந்து, 20 பேர் மரணம், 30 பேர் படுகாயம். ஆனால் அடுத்த முறை நீங்கள் பஸ்ஸில் ஏறும்போது, டிரைவர் குடித்திருக்கிறாரா, போதை தெளிந்துவிட்டதா என்று என்றைக்காவது சோதித்துப் பார்த்த பின்பு ஏறியிருக்கிறீர்களா? இல்லை. ஏன்? ஒரு நம்பிக்கை தான். சரி, ஏதோ ஒரு நம்பிக்கையில் ஏறிவிட்டீர்கள். இப்போது பஸ் போகும்போது, பயத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் இல்லை. பஸ் கிளம்பின உடனே, நிம்மதியான தூக்கம் வருகிறது. எப்படி? ஒரு உறுதியான நம்பிக்கை, அதாவது விசுவாசம் உங்களுக்கு இருப்பதால் தான்.

ஒருவேளை நீங்கள் சொல்லலாம். தற்கொலை செய்து கொள்கிறார்களே, அவர்களுக்கு நம்பிக்கையும், விசுவாசமும் இல்லை தானே என்று. ஆனால் அவர்களுக்குள்ளும் நம்பிக்கையும், விசுவாசமும் உண்டு. என்ன நம்பிக்கை? அவ்வளவு தான், இனி இந்த பிரச்னையை எந்த வகையிலும் தீர்க்கவே முடியாது என்ற நம்பிக்கை. மரணம் மட்டும் தான் இதற்கு தீர்வு என்ற நம்பிக்கை. என்ன விசுவாசம்? இனி வாழ்க்கையில் வாழ ஒன்றுமே இல்லை என்ற விசுவாசம். இனி எதிர்காலத்தில் அவர்களுக்கு நல்லதே நடக்காது என்ற விசுவாசம். அவர்களுக்கு எப்படி தெரியும்? எதிர்காலத்தை அவர்கள் பார்த்தார்களா? ஆனால் பார்க்காத ஒன்றைக் குறித்து அவர்களுக்கு ஒரு நிச்சயம் இருக்கிறது. இப்போது மீண்டும் வேதம் விசுவாசத்தைக் குறித்து சொல்கிறதைப் பாருங்கள்.
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. – எபிரேயர் 11:1.

எபிரேயர் 11.1

விசுவாசமானது காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

இதில் இருந்து இரண்டு காரியங்கள் நமக்குத் தெளிவாகும் என்று நம்புகிறேன்.

  1. நம் எல்லாருக்குள்ளும் நம்பிக்கையும், விசுவாசமும் உண்டு.
  2. தவறான நம்பிக்கையும், விசுவாசமும் நம் உயிரைப் பறித்துவிடும்.

இன்று உங்களைக் கேட்டுப்பாருங்கள். உங்கள் நம்பிக்கையும், விசுவாசமும் யார்மேல், எதன்மேல் இருக்கிறது? உங்களையும் என்னையும் நேசித்து, நமக்காக தம் ஜீவனையே தந்த இயேசுவின்மேல் உங்கள் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் வையுங்கள். நமக்கு ஜீவன் உண்டாக்கவும், அந்த ஜீவன் பரிபூரணப்படவும் வந்த நல்ல மேய்ப்பர் இயேசு கிறிஸ்து மீதே உங்கள் நம்பிக்கையும், விசுவாசமும் இருக்கட்டும்.

2 thoughts on “3. விசுவாசம்–நம்பப்படுகிறவைகளின் உறுதி

  1. Pingback: 4. விசுவாசம்–எதை நம்புகிறோம்? | Glorious Ministries Blog

  2. Pingback: 5. விசுவாசம்–இயேசுவில் தொடங்கட்டும் | Glorious Ministries Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s