5. விசுவாசம்–இயேசுவில் தொடங்கட்டும்

நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன். – 2 தீமோத்தேயு 1:12

விசுவாசம் நம்பப்படுகிறவைகளின் உறுதி என்றும், ஆகவே நாம் எதை நம்புகிறோம் என்பது மிகவும் அவசியம் என்பதும் பார்த்தோம். கடந்த முறை முடிக்கும்போது, இயேசு கிறிஸ்துவின் மேல் உங்கள் நம்பிக்கையை  வைக்கும்படி சொல்லி முடித்தேன். இப்போதும் அதையே தான் சொல்கிறேன்.

நம்முடைய விசுவாசம், சரி, கிறிஸ்தவ விசுவாசம் நாம் நினைப்பதைக் காட்டிலும் மிகவும் அருமையானது.  விலையேறப்பெற்றது. அது கர்த்தருக்கு மிகவும் பிரியமானது. என்றாவது நம்முடைய விசுவாசம்  தேவாதி தேவனை, சர்வத்தையும் படைத்த சிருஷ்டிகரை மிகவும் பிரியப்படுத்துகிறது என்று நீங்கள்  யோசித்துப்பார்த்தது உண்டா? அப்படிப்பட்ட விசுவாசம் இயேசுவில் தொடங்கவேண்டும்.

ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். நான் பிறந்தது முதலே கிறிஸ்தவளாக, கிறிஸ்தவனாக தானே இருக்கிறேன். அப்போது என் விசுவாசம் இயேசுவில் தானே இருக்கிறது என்று. துரதிருஷ்டவசமாக, அது உண்மை இல்லை. ஒரு உதாரணம் சொல்கிறேன்.

நான் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தேன். எங்கள் வீட்டிற்கு இரண்டு விசுவாசிகள் வந்திருந்தார்கள். வந்தவர்கள் பாஸ்டர் ஐயாவிடம் பேச ஆரம்பித்தார்கள். நானும் அங்கேயே தான் இருந்தேன். இரண்டு மணி நேரம் அமெரிக்காவை பற்றி பேசினார்கள், பேசினார்கள், பேசி கொண்டே இருந்தார்கள். எப்படி அமெரிக்கா இன்னும் இரட்சிக்கப்படாமல் இருக்கிறது, அங்கே எப்படி பெண்கள் ரோட்டில் நிர்வாணமாக அலைகிறார்கள், எப்படி ரோட்டில் நடக்கும்போதே கொலையும் கொள்ளையும் கற்பழிப்பும் சாதாரணமாக நடக்கிறது, அங்கே  வாழவே யாருக்கும் பிடிக்காது என்று இரண்டு மணி நேரம், அவர்கள் வாய் வலிக்கவில்லை, ஆனால் கேட்ட என் காதுகள் வலிக்க, பேசிக்கொண்டே இருந்தார்கள். நான் வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தேன். அதோடு அவர்கள் நிறுத்தி இருந்தால், நான் தாங்கிக்கொண்டிருப்பேன். ஆனால் கடைசியில் ஒரு ஆப்பு வைத்தார்கள், பாருங்கள். இரண்டு மணி நேரம் பேசி முடித்தபின்பு, என்னிடம் கேட்டார்கள்: “நாங்க சொல்றது எல்லாம் கரெக்ட் தானே, பிரதர்.” உண்மையாக சொல்கிறேன், நொந்துப்போய்விட்டேன்.

அந்த விசுவாசிகள் இருவரும் எங்கள் ஊரான வந்தவாசியை விட்டு அதிகம் வெளியே போகாதவர்கள். மெட்ராஸ்-க்குக் கூட அதிகமாக அவர்கள் போனதில்லை. இத்தனைக்கும் அது இங்கிருந்து 2-3 மணி நேரப் பயணம் தான். வேறு எதாவது மாவட்டம் போக வேண்டும் என்றால், அதற்கு எவ்வளவோ வழி கேட்டு, பயந்து, ஆலோசனை பண்ணி, ஜெபம் பண்ணி, அப்புறம் தான் போகலாமா என்றே முடிவு பண்ணுவார்கள். ஆனால் அமெரிக்கா பற்றி அவ்வளவு நேரம் பேசினார்கள். ஏன்? எங்கேயோ படித்தது. யாரோ சொன்னது. யாரிடமோ கேட்டது. சினிமாவில் பார்த்தது. சினிமாவில் பார்த்தவர்கள் சொல்லிக் கேட்டது. ஆனால் உண்மை நிலை எவ்வளவோ வேறு. எனக்குத் தெரிந்து எந்த இந்தியனும் இதுவரை அமெரிக்கா போனபிறகு, அங்கே வாழ பிடிக்கவில்லை என்று இந்தியாவுக்கு வந்ததில்லை.

அதே நிலை தான் நமக்கும். இயேசுவைக் குறித்து படித்திருக்கிறோம் – யாரோ எழுதினவைகளை. இயேசுவைக் குறித்து யாரோ சொன்னவைகளைக் கேட்டிருக்கிறோம். அநேகர் தங்கள் அனுபவங்களையும், தங்கள் சாட்சிகளையும் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால், நமக்கு இயேசுவைத் தெரியுமா? இயேசுவைப் பற்றித் தெரியும்; ஆனால் இயேசுவைத் தெரியுமா? தனிப்பட்ட முறையில் இயேசுவை உங்களுக்குத் தெரியுமா? தெரிந்திருந்தால், உங்கள் விசுவாசம் தேவனைப் பிரியப்படுத்தும். இல்லாவிட்டால், வாருங்கள். இந்த பயணத்தில், இயேசுவை தனிப்பட்ட முறையில் அறிந்துக்கொள்வோம். அறிந்து கொண்டு, அப்போஸ்தலனாகிய பவுலோடு சேர்ந்து சொல்வோம்: நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன். – 2 தீமோத்தேயு 1:12.

2 தீமோத்தேயு 1.12

 

Advertisements

One thought on “5. விசுவாசம்–இயேசுவில் தொடங்கட்டும்

  1. Pingback: 6. விசுவாசம்–இயேசுவை நோக்கி | Glorious Ministries Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s