6. விசுவாசம்–இயேசுவை நோக்கி

விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி… – எபிரேயர் 12:1

கடந்த முறை கிறிஸ்தவ விசுவாசம் இயேசுவில் தொடங்கவேண்டும் என்று எழுதி இருந்தேன். ஆனால் தொடங்கினால் மட்டும் போதாது. தொடர்ந்து இயேசுவை நோக்கிக் கொண்டே இருக்கவேண்டும். இயேசு கிறிஸ்து ஆதி அந்தமற்றவர். தொடக்கமும் முடிவும் இல்லாதவர். தேவனுடைய வார்த்தை என்பது அவருடைய நாமங்களில் ஒன்று. சகல சம்பூரணத்திற்கும் எல்லை உண்டு, ஆனால் தேவனுடைய வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவுக்கு எல்லை என்பதே கிடையாது. ஆகவே நம் விசுவாசமும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

இன்று அநேக கிறிஸ்தவர்கள் விசுவாச ஓட்டத்தை ஆரம்பித்த உடனே, கர்த்தராகிய இயேசுவின் மேல் இருந்து தங்கள் கண்களை எடுத்துவிட்டு, பிற ஆவிக்குரிய காரியங்களிலும், உபதேசங்களிலும், தங்களுக்கு அப்பாற்பட்ட காரியங்களிலும் ஈடுபட தொடங்குகிறார்கள்.

சமீபத்தில் ஒரு சகோதரர் என்னிடத்தில் வந்து “வாட்ஸ்-அப்”பில் அவருக்கு வந்த ஒரு புகைப்படத்தைக் காட்டி, என்னிடத்தில் கேட்டார்: “சாத்தான் சபையின் உட்புறம் இப்படி தான் இருக்குமா?” நான் அவரை ஒரு மாதிரியாக  பார்த்து  கேட்டேன், “ஏன் என்னைப் பார்த்தால் சாத்தான் சபைக்குப் போய் வந்ததுபோல இருக்கிறதா?” அவர் சொன்னார்  “இல்லை, உங்களுக்குத் தெரிந்து இருக்குமோ என்று கேட்டேன்.” என்னுடைய பதில் இதுதான் “இயேசு கிறிஸ்துவை பற்றி தெரிந்து கொள்ளவே எனக்கு என் வாழ்நாளெல்லாம் போதாது. இதில் சாத்தான் சபையைப் பற்றி நான் ஏன் தெரிந்து கொள்ளவேண்டும்?”

அப்போஸ்தலனாகிய பவுல் இதை மிக அழகாக சொல்கிறார். இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன். – 1 கொரிந்தியர் 2:2

ஒருவேளை நீங்கள் கேட்கலாம். அப்பொழுது பிற காரியங்கள், அதுவும் ஆவிக்குரிய காரியங்களைப் பற்றியும், சாத்தானின் கிரியைகளையும் பற்றி அறிந்து கொள்வது தவறா? அதை எல்லாம் எப்படி தெரிந்து கொள்வது? நியாயமான கேள்வி. அதற்கு தேவ சித்தமானால் நாளை பதில் சொல்கிறேன்.

இன்று இதை மாத்திரம் நாம் தீர்மானிக்கலாம். நம் விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசுவை நோக்கியே ஓடுவோம். இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் அறியாதிருக்கத் தீர்மானிப்போம். விசுவாசத்தில் வளருவோம். தேவனுக்குப் பிரியமானவர்களாய் வாழ்வோம். ஆமென்.

இயேசு

 

One thought on “6. விசுவாசம்–இயேசுவை நோக்கி

  1. Pingback: 7. விசுவாசம்–எது தவறு | Glorious Ministries Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s