சர்வ சிருஷ்டி 1. மேன்டிஸ் ஷ்ரிம்ப்

மேன்டிஸ் ஷ்ரிம்ப். இறால் வகை மீன்களில் ஒன்று. முதன்முதலில் இதன் போட்டோவை பார்த்தபோது, இப்படியும் அழகான ஒரு சிருஷ்டியைக் கர்த்தர் படைத்திருக்கிறாரே என்று ஆச்சர்யப்பட்டுப்போனேன். இதோ, மேன்டிஸ் ஷ்ரிம்புடைய புகைப்படம்.

Mantis Shrimp closeup

இதன் முன்னங்கால்கள் இரண்டும் இடுக்கிகள் போல வெகு வலிமையானது. மீன் தொட்டிகளில் இவற்றை வளர்க்கப் பார்த்தால், சில பெரிய மேன்டிஸ் ஷ்ரிம்புகள் அந்த கண்ணாடி தொட்டியை ஒரே அடியில் உடைத்துவிடும். அந்த அளவுக்கு அந்த இடுக்கிகள் வலிமையானவை. கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும், நம் கைகளில் பயங்கர வலியைத் தரக்கூடிய காயத்தை ஏற்படுத்தும். அதனால் தான், நான் இறால் மீனைத் தொடுவது என்றால், அவைகளை நன்றாக சமைத்து, என் தட்டில் வைத்தால் மட்டுமே தொடுவேன்.

இந்த மேன்டிஸ் ஷ்ரிம்புகளுடைய சிறப்பம்சங்களில் ஒன்று இதனுடைய கண்கள். மனிதனுடைய கண்களில் வெறும் 3 விதமான கூம்புகள் தான் நிறங்களைப் பார்க்க உதவுகிறது. ஆனால் இந்த மேன்டிஸ் ஷ்ரிம்புகளின் கண்களில் மொத்தம் 16 கூம்புகள் உண்டு. இரண்டு வகையான மேன்டிஸ் ஷ்ரிம்புகள் வட்ட முனைவாக்கப்பட்ட ஒளியை  (Tamil translation of circularly polarised light, தாங்க முடியலை சாமி) வித்தியாசம் காண முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 2014 அக்டோபரில், இந்த கூட்டுக் கண்களின் உதவியுடன் புற்றுநோய் திசுக்களையும், நியூரான்களின் செயல்பாடுகளையும் கண்டுபிடிக்க முடியும் என்று அறிவியல் உலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதோ, அதனுடைய கூட்டுக் கண்கள்.

Mantis Shrimp eyes

இன்னொரு விசேஷம் இந்த வகை ஷ்ரிம்புகளில் சில ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற வரைமுறைக்குள் வாழ்வது தான். 20 வருடங்கள் வரை அவை இணை பிரியாமல் வாழ்கிறது. மட்டுமல்ல, தங்கள் செயல்பாடுகளை ஒருங்கிணைத்துக் கொள்கின்றன. ஆண் ஷ்ரிம்ப் வெளியே போகும்போது, பெண் ஷ்ரிம்ப் வீட்டில் இருந்து, முட்டைகளை அடைகாக்கும். பெண் வெளியே போனால், ஆண் அடைகாக்கும். கீழே உள்ள ஃபோட்டோவில், ஒரு மேன்டிஸ் ஷ்ரிம்ப் தன் முட்டைகளை அடைகாக்கிறதை காணலாம். மஞ்சள் நிறத்தில் இருப்பது அதன் முட்டைகள்.

OLYMPUS DIGITAL CAMERA

இந்த மேன்டிஸ் ஷ்ரிம்புகளில் மயில் மேன்டிஸ் ஷ்ரிம்புகள் தான் மிகவும் அழகானவை. மயிலுக்கும் நிறங்களுக்கும் அப்படி ஒரு சம்பந்தம். கீழே இருப்பது மயில் மேன்டிஸ் ஷ்ரிம்புகளில் ஒன்று.

peacock_mantis-shrimp2

இதை பார்க்கும்போது, தேவ சமுகத்தில் என்னைத் தாழ்த்தாமல் இருக்க முடியவில்லை; கர்த்தரை அவருடைய அருமையான சிருஷ்டிகள் நிமித்தம் மகிமைப்படுத்தாமல் இருக்க முடியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவ என்னை தெரிந்து கொண்டாரே, அந்த இரக்கத்திற்காக, கிருபைக்காக, நன்றியோடு துதிக்காமல் இருக்க முடியவில்லை. அவருக்கே துதி கனம் மகிமை என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s