யாத்திராகமம் 34:14

கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்.

வேதத்தில் எபிரேய பாஷையில் இங்கே “எரிச்சலுள்ளவர்” என்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிற வார்த்தை,  கர்த்தருக்கு மாத்திரமே உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் சரியான அர்த்தம் தேவன் தமக்கு விரோதமாக யாரையும்  சகித்துக்கொள்ள மாட்டார். அப்படி என்றால், இந்த சர்வ சிருஷ்டியிலும் நம் தேவனுக்கு ஒப்பானவரோ, இணையானவரோ இல்லை. அது பிசாசுக்கும் தெரியும். மரணத்தினால் தன் தலையை நசுக்க இயேசு கிறிஸ்து வல்லவர் என்றால், அவரால் என்ன எல்லாம் செய்ய முடியும் என்று பிசாசுக்கு தெரியும்.

அப்படி என்றால், கர்த்தருக்கு ஒரு அந்நிய தேவன் இருக்கக் கூடிய ஒரே இடம் நம்முடைய இருதயம் மாத்திரமே. நாம் தேவனை நம்பாமல், மனுஷனை நம்பும்போது, மனுஷனுடைய ஆலோசனைகளில் நம் நம்பிக்கையை வைக்கும்போது, நம்மிடத்தில் இருக்கிற பணம், சொத்தை நம்பும்போது, தேவனுக்கு விரோதமாய் நம் இருதயங்களில் அந்நிய தேவர்களைப் பணிந்து கொள்கிறோம்.

இன்று ஒரு தீர்மானத்தோடு, சகலத்தையும் சிருஷ்டித்து, நம்மில் அன்புகூர்ந்து, நமக்காக தம் குமாரனையே பலியாக ஒப்புக்கொடுத்த பரலோக பிதாவை மாத்திரம் தொழுது கொள்வோம். நமக்காக தம் ஜீவனையே தந்து, நம்மை மீட்டெடுத்த இரட்சகர் இயேசுவை நேசிப்போம். அவரே நம் அன்புக்கும், நம்பிக்கைக்கும் பாத்திரர்.

யாத்திராகமம் 34.14

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s