நவம்பர் 06 2016

தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம். – 2 கொரிந்தியர் 9:15.

பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே! உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே!

நீர் எங்களுக்கு அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக, உம்முடைய ஒரேபேறான குமாரனுக்காக, எங்கள் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவுக்காக உம்மை நன்றியோடு துதிக்கிறோம்.

உம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிற நாங்கள் கெட்டுப்போகாமல், நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் எங்களில் அன்புகூர்ந்தீரே; எங்கள் பரலோக தகப்பனே, அந்த அன்புக்காக உம்மை நன்றியோடு துதிக்கிறோம்.

நாங்கள் கிறிஸ்துவுக்குள் உம்முடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை எங்களுக்காகப் பாவமாக்கினீரே, அந்த மகத்தான கிருபைக்காக ஸ்தோத்திரம். கிறிஸ்து எங்கள் பாவங்களைச் சுமந்து தீர்த்திராவிட்டால், நாங்கள் எங்கள் பாவங்களில் மரித்திருப்போமே. எங்களை மீட்கும் பொருளாக உம் குமாரனையே தந்தீரே, அந்த சொல்லிமுடியாத ஈவுக்காக, உமக்கு என்றும் ஸ்தோத்திரம்.

போடப்பட்ட அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவை அல்லாமல், வேறே அஸ்திபாரம் எங்களுக்கு இல்லையே. அவரே எங்களுக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானாரே. அதற்காய் உம்மை நன்றியோடு துதிக்கிறோம். தேவனே, எங்களுக்கு நன்மையுண்டாக எங்களை நினைத்தருளும். நீர் அருளிய சொல்லிமுடியாத ஈவாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் பிதாவே, ஆமென்.

2 கொரிந்தியர் 9-15

Advertisements

November 05 2016

This far you may come, but no further. – Job 38:11.

Dear child of God, are you downtrodden by people in your life, by things happening over which you have no control over? Are you worried about the never-ending waves of afflictions that buffet your life without any respite? Are you anxious that these waves would overcome your battle for survival? Take heart and look unto our Lord. The Almighty God Who commanded the waves of the oceans, “This far you may come, but no further”, has imposed gates and a bolt for your troubles also; yes, even to your troubles, this far they may come, but no further. Come to Jesus Christ. HE is the Answer to all your troubles. Amen.

Job 38_11

நவம்பர் 05 2016

இம்மட்டும் வா, மிஞ்சி வராதே. – யோபு 38:11

தேவனுடைய பிள்ளையே, உன் வாழ்க்கையில் வருகின்ற போராட்டங்களைக் குறித்து சோர்ந்து போயிருக்கின்றாயோ? கடல் அலைகள் கொந்தளித்து ஓயாமல் வந்து மோதுகிறதுபோல போராட்டங்கள் வந்து கொண்டிருக்கிறதோ? எங்கே இந்த போராட்டங்கள் உன்னை மேற்கொண்டுவிடுமோ என்று கலங்கி நிற்கிறாயோ? நம் ஆண்டவரை நோக்கிப் பார். “இம்மட்டும் வா, மிஞ்சி வராதே” என்று கடல் அலைகளுக்கு என்றும் கடவாத எல்லை விதித்தவர், உன் வாழ்க்கையின் போராட்டங்களுக்கும், இம்மட்டும் வா, மிஞ்சி வராதே என்ற ஒரு எல்லையைக் குறித்திருக்கிறார். அதை மீறி, ஒரு போராட்டமும் உன்னை மேற்கொள்ள முடியாது. அவரிடம் வா. இயேசு கிறிஸ்துவிடம் வா. உன் பிரச்னைகளுக்கு அவரே முடிவு. ஆமென்.

யோபு 38_11

November 04 2016

The path of the righteous is like the first gleam of dawn, shining ever brighter till the full light of day. – Proverbs 4:18.

At present, your life may be engulfed by darkness. You may not understand what is going on in your life at present. But, take heart, dear friend, the first gleam of dawn is seen; soon, your life will be shining every brighter, like the sun that keeps getting brighter and brighter till noon.

The path of the righteous… You are righteous, if you have accepted the Lord Jesus Christ as your Saviour and Redeemer. Then your path will surely shine forth. And you will lead many, who are in pitch black darkness, to the True Light, to Jesus Christ.

If you have not accepted Jesus as your Lord and Master, oh dear friend, here is your invitation. Jesus Christ, the Holy God Who bore your sins on the Cross, is calling for you. To become righteous by having faith in Him, Jesus is calling you. Come to Him. Become righteous. May your path shine brighter ever. Amen.

Proverbs 4_18

நவம்பர் 04 2016

நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும். – நீதிமொழிகள் 4:18.

காரிருள் உன்னைச் சூழ்ந்திருக்கலாம். ஒன்றுமே புரியாத நிலைமையில் நீ இருக்கலாம். ஆனால், உன் வாழ்க்கை பிரகாசிக்கும். நடுப்பகல்வரைக்கும் எப்படி சூரியனுடைய பிரகாசம் அதிகமதிகமாகிக் கொண்டே இருக்கிறதோ, அப்படியே உன் வாழ்க்கையும் பிரகாசமாகிக் கொண்டே போகும்.

நீதிமான்களுடைய பாதை… கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை ஆண்டவராக, சொந்த இரட்சகராக நீ ஏற்றுக்கொண்டிருந்தால்,  நீ நீதிமான். உன் பாதை நிச்சயமாகப் பிரகாசிக்கும். நீ இருளில் இருக்கும் அநேகருக்கு நித்திய வெளிச்சத்தைக் காட்டுவாய்.

ஒருவேளை இன்னும் நீ இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால், இதோ, உன்னை அழைக்கிறார். இயேசு கிறிஸ்து, உன் பாவங்களையெல்லாம் சுமந்துத்தீர்த்த இயேசு கிறிஸ்து, நீ விசுவாசத்தினால் நீதிமானாகும்படி உன்னை அழைக்கிறார். வா. நீதிமானாகு. உன் பாதை பிரகாசிக்கட்டும். ஆமென்.

நீதிமொழிகள் 4_18

November 03 2016

Trust in the LORD with all your heart, and lean not on your own understanding; in all your ways acknowledge Him, and He shall direct your paths.- Proverbs 3:5-6

When there is a new beginning, or when you reach a dead end, it is not difficult to trust in the LORD with all your heart; probably because you have no other way to go. But what happens when the spring season arrives in your life? When suddenly your world is filled with blooming flowers and sweet scent of new life?  Do you still trust in the LORD with all your heart or do you lean a little bit on your own understanding?

Remember those days, when your life resembled a dried stick with no hope left. But the Lord Who made your life blossom like the rod of Aaron, will make your life more prosperous. When you had nothing to trust on, the LORD Who became your Trust, and Who directed your paths, shall remain your Trust forever and direct your paths. Acknowledge Him in all your ways and Jesus shall lead you to green pastures and still waters. Amen.

proverbs-3-5-6

நவம்பர் 03 2016

உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். – நீதிமொழிகள் 3:5-6

வாழ்க்கையின் ஆரம்பங்களிலோ, நம்மால் இனி எதுவுமே செய்ய முடியாது என்ற நிலைமையிலோ, முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருப்பது கஷ்டம் அல்ல; வேறு வழியும் கிடையாது. ஆனால் வாழ்க்கையில் வசந்த காலங்கள் வரும்போது, வாழ்க்கை துளிர்விட ஆரம்பிக்கும்போது, உன் வழிகளெல்லாம் அவரை நினைத்துக்கொள்கிறாயா? இல்லை, உன் சுயபுத்தியின்மேல் சாய்ந்துக் கொள்கின்றாயா?

ஒன்றுமே இல்லாத இடத்தில் உலர்ந்துபோன ஆரோனின் கோலை துளிர்க்கச்செய்ததுபோல, உன் வாழ்க்கையைத் துளிர்க்கச் செய்த கர்த்தர், இனியும் உன் வாழ்க்கையைச் செழிக்க வைப்பார். நம்பிக்கையற்ற நிலைமையில், உன் நம்பிக்கையாயிருந்து, உன் பாதைகளைச் செம்மைப்படுத்தினவர் இனியும் செம்மைப்படுத்துவார். அவரையே நினைத்துக்கொள். இயேசு உன்னை நடத்துவார். ஆமென்.

%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-3-5_6