ஓட்டத்தை நிறுத்தாதே

போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே. – 2 இராஜாக்கள் 4:24

நேற்றைய தினம், “சுகம் தான்” என்று சூனேமியாளுடன் சொல்லி, இந்த கடைசி மாதத்துக்குள் பிரவேசித்தோம். பரலோகத்திலிருக்கிற நம்முடைய பிதா, தம்முடைய குமாரனும் நம்முடைய இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்கு அப்படியே சகலவற்றையும் சுகமாயிருக்கும்படி செய்வாராக.

துக்கம் அவள் ஆத்துமாவை நிரப்பின உடனே, அந்த சூனேமியாள், தேவனுடைய மனுஷனாகிய எலிசாவைப் பார்க்கும்படி புறப்பட்டாள். அப்படி புறப்பட்டபோது, அவள் தன்னுடைய வேலைக்காரனுக்குக் கொடுத்த கட்டளை தான்: போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே.

தேவனுக்குப் பிரியமானவர்களே! உங்கள் இருதயம் துக்கத்தினால் சோர்ந்துபோயிருக்கிறதோ? ஆத்துமா அநேக பிரச்னைகளினாலே துவண்டு போய் இருக்கிறதோ? அந்த சூனேமியாளுடைய வார்த்தையின்படியே செய்யுங்கள். தேவனுடைய மனுஷனைச் சந்திக்க தான் அவள் போனாள்; ஆனால் உங்களுக்காகவும் எனக்காகவும், தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே ஆயத்தமாய் இருக்கிறார். அவரிடம் வாருங்கள். நீங்கள் இருக்கிற இடத்திலேயே அவரைத் தேடினால் போதும், அவர் வருவார். வந்து, துக்கத்தில் இருக்கிற உங்கள் ஆத்துமாவிடம் சொல்வார்: சுகம் தான். ஆமென்.

ஓட்டத்தை

Advertisements

2 thoughts on “ஓட்டத்தை நிறுத்தாதே

  1. Pingback: இயேசுவின் காலைப் பிடித்துக்கொள்ளுங்கள் | Glorious Ministries Blog

  2. Pingback: இயேசுவின் காலை… | Glorious Ministries Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s