உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி

கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய். – ஏசாயா 58:11

மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்குவார். இந்த புதிய வருடத்தில் தம்முடைய பிள்ளைகளுக்குக் கர்த்தர் கொடுக்கிற வாக்குத்தத்தம் இதுவே. முன்பு சொன்னதுபோல, இந்த வருடம் உலகத்திற்கு மிகக் கொடிய வருடமாகவே இருக்கும். கடைசி காலத்தின் பேரழிவுகள் பூமியைத் தலைகீழாகப் புரட்டிப் போடுவதுபோல இருக்கும். ஆனால், தேவனுடைய பிள்ளையே, திடன்கொள். மிகுந்த உபத்திரவத்தின் காலத்திலும், உன் ஆத்துமாவைத் திருப்தியாக்குவேன் என்று கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணுகிறார்.

கொடிய உஷ்ணக் காலத்தில், உனக்கு அருமையான நிழலாய்க் கர்த்தர் இருப்பார்; கடும் மழையின் காலத்தில் தப்பும் உறைவிடமாய் அவரே இருப்பார். வெள்ளம்போல சத்துரு வரும்போது, யெஹோவா நிஸி என்னும் ஜெயக்கொடியை ஆவியானவர் தாமே உனக்குமேல் பறக்கச் செய்வார். அந்தகார இருளிலும், இயேசு கிறிஸ்துவே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். மகா வறட்சியான காலங்களிலும் கர்த்தர் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்குவார்.

ஏசாயா 58_11

நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல உன் ஆத்துமா திருப்தியாகும் (சங்கீதம் 63:5). வறட்சியினால் உன் வாய் உலர்ந்து போகாது, உன் உதடுகள் ஒட்டிக்கொள்ளாது. கர்த்தர் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்குகிறதினாலே, உன் வாய் ஆனந்த களிப்புள்ள உதடுகளால் கர்த்தரைப் பாடி மகிழும். ஆம், கடந்த வருடம், துக்கங்களின் மிகுதியால், உன் வாய் தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்திருக்கலாம். தேவனை பாடாமல் இருந்திருக்கலாம். உன் உதடுகள் நன்றி சொல்ல முடியாமல் ஒட்டிக்கொண்டிருக்கலாம். உன் துக்கத்தையே பேசிக்கொண்டிருந்திருக்கலாம். கர்த்தர் சொல்கிறார். நான் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்குவேன்; உன் வாய் ஆனந்தகளிப்புள்ள உதடுகளால் என்னைப் போற்றும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, கர்த்தருக்கு அன்பாயிருந்த சீஷன் கூறின ஆசீர்வாதம் உன்மேல் வந்ந்து பலிக்கட்டும். பிரியமானவனே, பிரியமானவளே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல, நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன். ஆமென்.

Advertisements

… will satisfy your soul in drought.

The LORD will guide you continually, and satisfy your soul in drought, and strengthen your bones; you shall be like a watered garden, and like a spring of water, whose waters do not fail. – Isaiah 58:11

The Lord will satisfy your soul in drought. This is a promise that the Lord gives to His children in this year. As I wrote in an earlier blog, this year may be a terrible one for the world, with the end-time calamities turning everything upside down. But, dear child of God, take heart for the Lord our God promises to satisfy your soul, even during the toughest of times. Even in utter darkness, the Lord shall be your Light. HE shall be a shadow unto you when the sun beats on you. When the floods come against you, the Spirit of God will raise a banner over you, the banner that says “YHWH Nissi”. And your soul shall not wither because of the terrible conditions around you.

Isaiah 58_11

Your soul will be satisfied by the Lord. Your soul shall be satisfied with marrow and fatness. (Psalm 63:5). Instead of going dry because of the drought, your mouth will open wide and praise the Lord with joyful lips. Last year, your mouth may have murmured or complained against the Lord; your lips may have said only very sorrowful words. But this year, the Lord promises that the same lips be joyful. Yes, with joyful lips, you shall open your mouth and praise Him.

And above all, may the blessing of the beloved Apostle rest on your head in this new year. As the Lord satisfies your soul, I pray that you may prosper in all things and be in health, just as your soul prospers. (3 John 2). Amen.

பஞ்சக்காலத்தில்…

கர்த்தர்… பஞ்சக்காலத்தில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி… – ஏசாயா 58:11

இந்த வாக்குத்தத்தம் அநேக கிறிஸ்தவர்களைச் சந்தோஷப்படுத்துவது உண்மை. ஆனால் இது ஒரு வாக்குத்தத்தம் மட்டுமல்ல, இது ஒரு தீர்க்கதரிசனமும் கூட. வாழ்க்கையில் எப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் கர்த்தர் நம் ஆத்துமாக்களைத் திருப்தியாக்கி நடத்துவார்; ஆனால் இங்கு குறிப்பாக பஞ்சக்காலத்தில் என்று கர்த்தர் சொல்கிறார். நாம் அதை கவனிக்கிறது இல்லை; ஆகவே, பஞ்சங்களும், திர்பாராத வறட்சிகளும் வரும்போது, நாம் திகைத்து நின்று விடுகிறோம்.

இந்த வாக்குத்தத்தத்தின் மூலம், வருகிற வருடத்தில் கொடிய பஞக்காலங்கள் வரும் என்று கர்த்தர் நமக்கு சொல்கிறார். பஞ்சக்காலம் என்றால், இரு வகையான பஞ்சங்களும் வரும். ஒரு பக்கம், மிகுத்இயான மழை பெய்து, தேசத்தை துவம்சம் செய்யும்; இன்னொரு பக்கம், மழையே இல்லாத வறண்ட பூமியாய், தேசம் வாடிப்போகும். இதுவும் இல்லாமல் இன்னும் அநேக சேதங்களும், பேரழிவுகளும் தேசங்களுக்கு வருகிற வருஷம் இது.

ஆனால் அதின் நடுவிலும், தம்முடைய பிள்ளைகளின் ஆத்துமாக்களைக் கர்த்தர் திருப்தியாக்கி நடத்துவார். ஆகவே, தேவ பிள்ளையே, திடன்கொள். பயப்படாதே. அதே சமயம், நீ இருக்கிற தேசத்துக்காகவும், அதில் இருக்கிற ஆத்துமாக்களுக்காகவும் ஜெபிக்க இந்த புது வருடத்திலே தீர்மானம் எடு. கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

ஏசாயா 58_11 பஞ்சக்காலத்தில்

…In drought…

The LORD will… satisfy your soul in drought… – Isaiah 58:11

Many Christians take this promise and are happy. Except that we do not realize that it is not only a promise, but also is a prophetic warning. The Lord is, of course, giving a promise that He will satisfy our souls, no matter what the condition is… but here He specifically tells that “in drought”. Often we miss this point, so when things go wrong, when there is a drought, we are taken by surprise. Then we are confused and shaken.

But God tells us that there will be severe droughts in this year. Not necessarily scarcity of water, but also the other way around. Heavy rainfalls that are destructive will devastate a part of the nation, while the other part will be facing severe drought with no water. It is not only water-based drought. There will be many cataclysmic events that will tear the world apart. However, the Lord promises His children that their souls will be satisfied, no matter what the external conditions are. So, dear child of God, cheer up and take courage. Also, in this new year, resolve to pray for your country and for all the souls in your country.

Isaiah 58_11 drought

கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி…

கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி… – ஏசாயா 58:11

அநேக கிறிஸ்தவர்கள், தேவன் தங்களோடு இராவிட்டால், அவருடைய ஆசீர்வாதங்களையும், வாக்குத்தத்தங்களையும் பெற்றுக்கொள்ள முடியாது என்ற தவறான எண்ணம் கொண்டிருக்கிறார்கள். அதனால், ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதையும், ஜெபங்களுக்குப் பதில் கிடைப்பதையுமே தேவன் தங்களோடு இருக்கிறதற்கு அடையாளமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதனால், பலமுறை பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய பாவங்களைக் குறித்து எச்சரித்தும், ஒரு ஆசீர்வாதம் வந்த உடனே, தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்திக் கொள்கிறார்கள். தங்கள் பாவங்களை அறிக்கை செய்து, தங்களைத் தாழ்த்தி, கிறிஸ்து இயேசு மூலமாய் தேவனுடைய மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளாமல் போகிறார்கள். அவர்கள் சொல்வது என்னவென்றால், கர்த்தர் இதை பாவமாக கருதியிருந்தால், எங்களுக்குள் பாவம் இருந்திருந்தால், இந்த ஆசீர்வாதம் எப்படி எங்களுக்கு வந்து சேரும்?

யாத்திராகமம் 33-ஆம் அதிகாரத்தில், கர்த்தர் மோசேயிடம் வாக்குத்தத்த தேசத்தை தருவதாகவும், இஸ்ரவேலருடைய சத்துருக்களையெல்லாம் அவர்களுக்கு முன்பாக சிதறடிப்பதாகவும் சொல்கிறார். ஆனால் தாம் அவர்களோடு  வருவதில்லை என்றும் சொல்கிறார். அதாவது, வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவேன்,  ஆசீர்வதிப்பேன், ஆனால் அவர்களோடு கூட இருக்க மாட்டேன் என்று கர்த்தர் சொல்கிறார்.

அதனால் தான் வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதும், ஜெபங்களுக்கு பதில் கிடைப்பதும் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்பதற்கு அடையாளங்கள் அல்ல. அப்படிப்பட்ட ஆசீர்வாதங்கள் வந்து சேர்வது நாம் நல்லவர்கள் என்பதாலும் அல்ல. அது கர்த்தர் நல்லவர் என்பதற்கு மாத்திரமே அடையாளம். ஆகவே தான் பரலோக பிதாவை குறீத்து பேசும்போது, இயேசு கிறிஸ்து இப்படி சொல்கிறார்: அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். (மத்தேயு 5:45)

இதை உணர்ந்தவராய், மோசே, ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறார். கர்த்தர் தங்களோடு வரவேண்டும் என்று விண்ணப்பிக்கிறார். ஆகவே கிறிஸ்தவர்களாகிய நாம் எத்தனை ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டோம், எத்தனை ஜெபங்களுக்குப் பதில் கிடைத்து இருக்கிறது என்பதை விட, கர்த்தர் நம்மோடு இருக்கிறாரா, அவர் நம்மை வழிநடத்துகிறாரா என்பதற்கே முக்கியம் தரவேண்டும். கர்த்தர் நம்மோடு இருந்தால், ஆசீர்வாதங்களும், வாக்குத்தத்தங்கள் நிறைவேறுதலும், ஜெபங்களுக்குப் பதில் கிடைத்தலும் கூடவே கிடைக்கும்.

இந்த புது வருடத்தில், கர்த்தர் நம்மை நித்தமும் நடத்த வாக்குப்பண்ணுகிறார். நாம் நல்லவர்கள் என்பதால் அல்ல, அவருடைய கிருபையினாலே. மோசேயிடம் சொன்னதுபோல நம்மிடம் சொல்கிறார்: என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது. என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும். (யாத்திராகமம் 33:17) ஆனால் நல்லவர்கள் அல்லாத நமக்கு எப்படி கர்த்தருடைய கிருபை கிடைக்கிறது?

நம் மீட்பரும் இரட்சகருமாகிய கிறிஸ்து இயேசு நம் பாவங்களை எல்லாம் கல்வாரி சிலுவையில் சுமந்து தீர்த்ததினால், அவருடைய பரிபூரணத்தினால் கிருபைமேல் கிருபை பெற்றிருக்கிறோம். ஆகவே, இந்த புது வருடத்தின் தொடக்கத்தில் தானே, கல்வாரியை நோக்கிப்பார்ப்போம், நம் பாவங்களை அறிக்கையிடுவோம், பரிசுத்த தேவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்துவோம், கிறிஸ்து இயேசு மூலமாய், தேவனுடைய மன்னிப்பைக் கேட்போம். அப்பொழுது அவர் கண்களில் நமக்குக் கிருபை கிடைக்கும். கர்த்தர் நம்மை நித்தமும் வழிநடத்துவார். அப்படியே ஆகட்டும். ஆமென்.

யாத்திராகமம் 33_17

The Lord will guide you continually…

The LORD will guide you continually… – Isaiah 58:11

Many Christians are under the impression that if God is not with them, then they will not be able to receive any blessings. So, receiving a blessing is seen as a sure sign that God is with them. As a result of this, there are few Christians who are convicted of their sins by the Holy Spirit, but when they receive blessings, they harden their hearts without confessing their sins and seeking the forgiveness of our Lord, through Jesus Christ, our Saviour. Their reasoning is if the Lord has not forgiven, if He is not with us, how would He bless us in this matter?

In the 33rd chapter of Exodus, the Lord tells Moses to go ahead to the Promised Land. That He would give the land to the Israelites by driving their enemies away as He had promised their forefathers. Yet, the LORD specifically says that He will not with them, instead will send an angel with them. In essence, God is telling them that they would be blessed and they would see the promises of the Lord being fulfilled, except that the Lord would not be with them.

Many Christians seek the blessings and answers to their prayers as a sign that God is with them. These things are not sure sign that God is with you. Jesus tells that our heavenly Father makes His sun rise on the evil and on the good, that He sends rain on the just and on the unjust. (Matthew 5:45) So, let us not look at the blessings and answered prayers as a sign of how good we are. Those are the signs that our Lord is good.

Moses understood this, that was why he refused to accept such a blessing. We may not receive a single blessing on this earth, but is God with us? Then that is more than sufficient. That is what we, Christians, must seek – that the Lord is with us, and that He will guide us. That all the blessings and promises we receive are the side-effects of God being with us.

In this New Year, the Lord promises to guide us continually, forever. Oh, if we are not perfect, why would God promise such a thing? Because of His grace. It is not because of anything else, but because our God is gracious and compassionate. As a result, He promises to guide us. As He said to Moses, He says to us: “You have found grace in My sight.” (Exodus 33:17)

And we receive this grace, because Jesus Christ has taken our sins away from us. Let us look at Calvary on this New Year, confess our sins, humbles ourselves before the Holy Lord, and seek His forgiveness. And we will find grace, and we will see that the Lord is guiding us continually. So be it. Amen.

Exodus 33_17