என் இருதயத்தின் வேண்டுதல்கள்

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். – சங்கீதம் 37:4

என் இருதயமே, ஏன் சோர்ந்து போயிருக்கிறாய்? எதிர்காலத்தைக் குறித்த பயங்கள் உன்னை வாட்டிக்கொண்டிருக்கிறதோ? இல்லை, உன் ஆழத்தில் ஒருவேளை கர்த்தர் எனக்கு சொன்னதை எல்லாம் செய்யாமல் போய்விடுவாரோ என்ற அவிசுவாசம் உன்னோடு போராடிக்கொண்டிருக்கிறதோ? உன் இருதயத்தின் வேண்டுதல்கள் உனக்கு கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற போராட்டமோ?

ஓ என் இருதயமே, இந்த உன் அவிசுவாசங்களின் நடுவிலும், உன் கேள்விகளின் நடுவிலும், நீ விசுவாசித்து ஆராதிக்கிற தேவன் ஒருவராய் பெரிய அதிசயங்களைச் செய்கிறவர் என்று நீ அறிந்திருக்கிறாய்.  அவர் வார்த்தையில் உண்மையுள்ளவர் என்று நீ அறிந்திருக்கிறாய். நீ விசுவாசிக்கிறவர் இன்னார் என்று நீ அறிந்திருக்கிறாய். உன்னை நேசிக்கிற பரம பிதா, தம்முடைய ஒரே குமாரனான இயேசு கிறிஸ்துவையே உனக்காக ஒப்புக்கொடுத்தவர் – நீ அவரை அறிந்திருக்கிறாய். இன்னும் ஏன் துக்கத்தோடு இருக்கிறாய், என் இருதயமே? உன் எஜமானன் உன்னிடத்தில் ஒரு சின்ன காரியம் மாத்திரமே கேட்கிறார் – உன் இருதயத்தின் வேண்டுதல்களை அருள்செய்ய அவர் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று மாத்திரமே – நீ என்னில் மனமகிழ்ச்சியாயிரு.

ஓ, நீ கேட்பது புரிகிறது – என் சூழ்நிலைகள் காரிருள் சூழ்ந்திருக்கிறது; அடுத்த அடி என்ன செய்வது என்று கூட எனக்குத் தெரியவில்லை. இதில் நான் எப்படி கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருக்க முடியும் என்று கேட்கிறாய்? ஆனால், என் ஆத்துமமே, எப்போதிருந்து உன்னை சிருஷ்டித்த தேவனிடத்தில் நீ மனமகிழ்ச்சியாயிருக்க, சிருஷ்டிக்கப்பட்ட சூழ்நிலைகளும், மனிதர்களும் தடையாக இருக்க முடிந்தது? உன் மீட்பரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி, எத்தனை முறை நீ அப்போஸ்தலனாகிய பேதுருவோடு சேர்ந்து சொல்லி இருக்கிறாய் – “ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்; நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர்.” மறந்து போனாயோ? பேதுருவோடு, அந்த கடற்கரையிலே நீயும் நின்று, உடைந்த உள்ளத்தோடு, கண்ணீர் ததும்பும் கண்களோடு, நெஞ்சம் விம்ம, நீ அந்த வார்த்தைகளை சொன்னதை நினைத்துப் பார். அந்த வார்த்தைகளை உண்மையாகத்தானே நீ சொன்னாய்? இப்போதும் அந்த தெய்வீக அன்பு உன்னை நிரப்பட்டும். கிறிஸ்துவின் கல்வாரி அன்பும், பரமபிதாவின் தந்தைக்குரிய அன்பும், பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்தமான அன்பும் உன்னை நிரப்பட்டும். அந்த அன்பினால் நீ அவரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; அவர் உன் வேண்டுதல்களை உனக்கு அருளிச்செய்வார்.

சங்கீதம் 37_4

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s