உம்மையே நம்பியிருக்கிறேன்

அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். – சங்கீதம் 143:8

என் பரலோக பிதாவே, என் தகப்பனே, அப்பா, பிதாவே, இந்த காலை நேரத்தில், எல்லாவற்றிற்கும் மேலாக உம்முடைய கிருபையை வாஞ்சிக்கிறேன். உம்முடைய குமாரனும், என் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம், நான் உம்மையே நம்பி இருக்கிறேன். இன்று உம்முடைய கிருபையை, உம்முடைய தயவை, உம்முடைய அன்பை நான் கேட்கும்படி பண்ணும், தகப்பனே! இந்த புதிய நாளில் நான் செல்ல வேண்டிய பாதையை எனக்குக் காட்டும். உமக்குப் பிரியமான வழி எது என்று எனக்குத் தெரியாது. ஆகவே, என் ஆத்துமாவை உம்மிடத்தில் உயர்த்துகிறேன். என் ஆத்துமாவைக் கண்டு என் மேல் மனமிரங்கும், என் தகப்பனே. நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும். அதில் நடக்க தேவையான கிருபையை எனக்குத் தாரும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன், என் நல்ல பிதாவே, ஆமென்.

சங்கீதம் 143_8

Advertisements

In You, I trust

Cause me to hear Your loving-kindness in the morning, for in You do I trust; Cause me to know the way in which I should walk, for I lift up my soul to You. – Psalm 143:8 (NKJV)

My dear Father in Heaven, this morning, I seek above everything, Your loving-kindness. Through Jesus Christ, Your Son and my Redeemer, I trust in You, my Eternal Father. May I hear Your loving-kindness, Your love, Your grace and Your favor this morning. As the day is breaking, cause me to know the way in which I should walk. For I do not know the steps I need to take. I lift my soul to You. Look at my soul, dear Father, have mercy on me, and show me the way I should walk; and give grace so that I can walk in the path that You have destined for me. Through Jesus, I ask. Amen.

Psalm 143_8

தேவனுக்கு உன்னைத் தெரியும்

என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். – சங்கீதம் 139:13

அன்பான சகோதரனே, சகோதரியே! தேவனுக்கு உன்னைத் தெரியும். இன்று அல்ல. நீ உன் வாழ்க்கையை கிறிஸ்துவுக்காக ஒப்புக்கொடுத்தபோதல்ல. நீ ஒரு பாவி என்று உணர்ந்து, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபோதல்ல. இல்லை, எனக்கன்பானவர்களே. உலகத்தை உருவாக்குமுன்னே, தேவன் உங்களை அறிந்து இருந்தார். நீங்கள் தாயின் கர்ப்பத்தில் உருவாகுமுன்னே, உங்களை பெயர் சொல்லி அறிந்தவர் அவர். உங்கள் தாயின் கர்ப்பத்தில் உங்களைக் காப்பாற்றி, இந்நாள் மட்டும் உங்கள்மேல் நோக்கமாயிருக்கிறவர் அவர். ஏனென்றால் அவர் உங்கள் சிருஷ்டிகர், உங்கள் பரமபிதா. தம்முடைய குமாரனாகிய இயேசுவையே உங்களுக்காகக் கொடுத்தவர். ஒரு நல்ல அப்பாவைப் போல், தேவன் உங்களைக் குறித்து, சில திட்டங்களை வைத்திருக்கிறார். உங்கள் தோல்விகள் பற்றி அவருக்குத் தெரியும். உங்கள் குறைகளும் அவருக்குத் தெரியும். ஆனாலும், உங்களுக்கு ஒரு நம்பிக்கையையும், எதிர்காலத்தையும் கொடுக்கும்படியான திட்டங்கள் அவைகள்.

ஆகவே இன்று நடக்கிற சில காரியங்கள் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்க விடாதிருங்கள், அன்பானவர்களே. தற்கொலை உங்களுக்கு ஒரு வழியே அல்ல. இன்று ஒருவேளை காதல் தோல்வியினால் உன் இருதயம் துவண்டு போயிருக்கலாம். ஆனாலும் இதுவும் கடந்து போகும். நீ எதிர்பார்த்த வேலை உனக்குக் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் இது உன் முடிவு அல்ல. நீ கனவு கண்ட படிப்பு உனக்குக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இது அல்ல உன் வாழ்க்கையின் முடிவு. ஒரு கதவு மூடும்போது, தேவன் உனக்காக வேறொரு கதவை நிச்சயம் திறப்பார்.

நீ தாயின் கர்ப்பத்தில் உருவாகும்போது, உன்னை அன்போடு நோக்கிப் பார்த்த அதே கண்களால், தேவன் இந்த வேளையும் உன்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார். தேவனிடத்தில் வாருங்கள். அவர் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடம் வாருங்கள். தம் அன்பினால் அவர் உனக்கு ஆறுதல் தருவார். உன்னைப் பெலப்படுத்தி, தம் திட்டங்களை உன் வாழ்க்கையில் நிறைவேற்றுவார். நம்பி வா. ஆமென்.

சங்கீதம் 139_13

God knows you

You covered me in my mother’s womb. – Psalm 139:13 (NKJV)

Dear friend, God knows you. Not today. Not when you surrendered your life to Him. Not when you realized that you are a sinner. No, no… God knew you even before this world was created. God knew you by name even before you were formed in your mother’s womb. God covered you in your mother’s womb, protected you and even to this day, knows your every doing. Because He is your Creator. Because He is your Father. Because, like a good Father, He has plans for you. Plans that include all your failures. Plans that take into account all your shortcomings. Plans to give you hope and a future.

So, don’t let something that happens today to decide your life. Suicide is not an option, dear friend. A love failure is but temporary; it will fade away. Not getting a job that you desired is not the end of your life. Your life will move on. Not getting an education that you dreamt of, need not be the end of the road for you. When one door closes, God opens another door for you. The same eyes that looked at you, with compassion as you were formed in your mother’s womb, are still looking at you – with the same love and compassion. Come to God. Come to His Son Jesus Christ. And He will quiet you with His love. Amen.

Psalm 139_13