சர்வ சிருஷ்டி 2. சாலார் டே உயுனி, பொலிவியா

Salar de 01

இது என்ன? தண்ணீரின்மேல் நடக்கிற அற்புதமா? உறைந்து போன ஏரியின் மேல் நடப்பதா? கேமரா விளையாட்டா? இல்லை நம் கண்களில் ஏதாவது கோளாறா? இது எதுவுமே சரியான விடை இல்லை. இது பொலிவியா தேசத்திலுள்ள, சாலார் டே உயுனி என்கிற உப்புப் படுகை. ஆம், கீழ் இருப்பது தண்ணீரோ, உறைந்த பனியோ அல்ல. கீழே இருப்பது உப்பு.

பொலிவியா தேசம் எங்கே இருக்கிறது என்று நீங்கள் யோசிக்க ஆரம்பித்தால், அது தென் அமெரிக்காவிலுள்ள ஒரு தேசம்.

bolivia-location-map

இந்த உப்புப் படுகை உலகத்திலேயே மிகப் பெரிய உப்புப் படுகை. எவ்வளவு பெரிதென்றால் இதற்கு நடுவில் ஒரு குட்டித் தீவே இருக்கிறது என்றால் பாருங்களேன். இந்த தீவின் பெயர் இன்காஹூயஸி. இந்த புகைப்படத்தை கிளிக் செய்தால், பனோராமா வ்யூவில் இந்த தீவைப் பார்க்கலாம்.

Salar_de_Uyuni_Décembre_2007_-_Panorama_1_edit

இந்த உப்புப் படுகையில் ஏறக்குறைய 10 பில்லியன் டன் உப்பு இருக்கிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. 1-க்கு பின் ஏராளமான பூஜ்யங்கள் போடவேண்டும். உலகத்தின் லிதியம் இருப்பில் 43% சதவீதம் பொலிவியாவிலும், அதில் பெரும்பங்கு இந்த உப்புப் படுகையிலும் இருக்கிறது. லிதியம் பற்றி நமக்கு என்ன கவலை என்று நினைக்கிறீர்களா? செல்ஃபோன் பயன்படுத்துகிறீர்களா, அதில் இருக்கும் பேட்டரி லிதியம் பேட்டரி. சரி, இன்னும் சில புகைப்படங்கள்.

Salar 02

Salar de 03

Salar de 04

எவ்வளவு அழகான சிருஷ்டிகர் நாம் ஆராதிக்கிற தேவன்!

Advertisements

சர்வ சிருஷ்டி 1. மேன்டிஸ் ஷ்ரிம்ப்

மேன்டிஸ் ஷ்ரிம்ப். இறால் வகை மீன்களில் ஒன்று. முதன்முதலில் இதன் போட்டோவை பார்த்தபோது, இப்படியும் அழகான ஒரு சிருஷ்டியைக் கர்த்தர் படைத்திருக்கிறாரே என்று ஆச்சர்யப்பட்டுப்போனேன். இதோ, மேன்டிஸ் ஷ்ரிம்புடைய புகைப்படம்.

Mantis Shrimp closeup

இதன் முன்னங்கால்கள் இரண்டும் இடுக்கிகள் போல வெகு வலிமையானது. மீன் தொட்டிகளில் இவற்றை வளர்க்கப் பார்த்தால், சில பெரிய மேன்டிஸ் ஷ்ரிம்புகள் அந்த கண்ணாடி தொட்டியை ஒரே அடியில் உடைத்துவிடும். அந்த அளவுக்கு அந்த இடுக்கிகள் வலிமையானவை. கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும், நம் கைகளில் பயங்கர வலியைத் தரக்கூடிய காயத்தை ஏற்படுத்தும். அதனால் தான், நான் இறால் மீனைத் தொடுவது என்றால், அவைகளை நன்றாக சமைத்து, என் தட்டில் வைத்தால் மட்டுமே தொடுவேன்.

இந்த மேன்டிஸ் ஷ்ரிம்புகளுடைய சிறப்பம்சங்களில் ஒன்று இதனுடைய கண்கள். மனிதனுடைய கண்களில் வெறும் 3 விதமான கூம்புகள் தான் நிறங்களைப் பார்க்க உதவுகிறது. ஆனால் இந்த மேன்டிஸ் ஷ்ரிம்புகளின் கண்களில் மொத்தம் 16 கூம்புகள் உண்டு. இரண்டு வகையான மேன்டிஸ் ஷ்ரிம்புகள் வட்ட முனைவாக்கப்பட்ட ஒளியை  (Tamil translation of circularly polarised light, தாங்க முடியலை சாமி) வித்தியாசம் காண முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 2014 அக்டோபரில், இந்த கூட்டுக் கண்களின் உதவியுடன் புற்றுநோய் திசுக்களையும், நியூரான்களின் செயல்பாடுகளையும் கண்டுபிடிக்க முடியும் என்று அறிவியல் உலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதோ, அதனுடைய கூட்டுக் கண்கள்.

Mantis Shrimp eyes

இன்னொரு விசேஷம் இந்த வகை ஷ்ரிம்புகளில் சில ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற வரைமுறைக்குள் வாழ்வது தான். 20 வருடங்கள் வரை அவை இணை பிரியாமல் வாழ்கிறது. மட்டுமல்ல, தங்கள் செயல்பாடுகளை ஒருங்கிணைத்துக் கொள்கின்றன. ஆண் ஷ்ரிம்ப் வெளியே போகும்போது, பெண் ஷ்ரிம்ப் வீட்டில் இருந்து, முட்டைகளை அடைகாக்கும். பெண் வெளியே போனால், ஆண் அடைகாக்கும். கீழே உள்ள ஃபோட்டோவில், ஒரு மேன்டிஸ் ஷ்ரிம்ப் தன் முட்டைகளை அடைகாக்கிறதை காணலாம். மஞ்சள் நிறத்தில் இருப்பது அதன் முட்டைகள்.

OLYMPUS DIGITAL CAMERA

இந்த மேன்டிஸ் ஷ்ரிம்புகளில் மயில் மேன்டிஸ் ஷ்ரிம்புகள் தான் மிகவும் அழகானவை. மயிலுக்கும் நிறங்களுக்கும் அப்படி ஒரு சம்பந்தம். கீழே இருப்பது மயில் மேன்டிஸ் ஷ்ரிம்புகளில் ஒன்று.

peacock_mantis-shrimp2

இதை பார்க்கும்போது, தேவ சமுகத்தில் என்னைத் தாழ்த்தாமல் இருக்க முடியவில்லை; கர்த்தரை அவருடைய அருமையான சிருஷ்டிகள் நிமித்தம் மகிமைப்படுத்தாமல் இருக்க முடியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவ என்னை தெரிந்து கொண்டாரே, அந்த இரக்கத்திற்காக, கிருபைக்காக, நன்றியோடு துதிக்காமல் இருக்க முடியவில்லை. அவருக்கே துதி கனம் மகிமை என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென்.

40 நாட்கள்

நேற்றிலிருந்து, அநேக கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் கிறிஸ்து இயேசுவின் பாடுகள், மரணம் பற்றி தியானிக்கும்படி, அநேக தீர்மானங்களை எடுத்திருப்பார்கள். நானும் ஒரு தீர்மானம் எடுத்திருக்கிறேன்.

அநேக வருடங்களாக, சங்கீதம் 148 எனக்குள்ளே கிரியை செய்து கொண்டிருக்கிறது. எப்படி சர்வ சிருஷ்டியும் கர்த்தரை தொழுது கொண்டிருக்கிறது என்று நினைக்கும்போதெல்லாம், நான் என்னால் முடிந்த வரை, சில நாட்களாவது, கர்த்தரின் சிருஷ்டிகளைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

இந்த 40 நாட்கள் நான் ஒவ்வொரு நாளிலும் எதாவது ஒரு சிருஷ்டி பற்றி, இதுவரை நான் அறியாத ஒன்று, விலங்கினமோ, தாவரமோ, பூமியிலுள்ள இயற்கையான எதாவது ஒன்று பற்றி அறிந்து, அவைகளோடு சேர்ந்து கர்த்தரைத் துதிக்கப்போகிறேன். அவருடைய நாமம் மாத்திரம் மகிமையடையட்டும். 

சங்கீதம் 148.7