வெளிச்சம் தேவை

சில நாட்களுக்கு முன்பு ஒரு வீட்டின் முன்னே, சூரிய வெளிச்சம் படும்படியான இடத்தில் இருந்த ஒரு மரம், பெரிய அழகான, அருமையான மொட்டுக்களை விட்டிருந்ததை நாங்கள் கண்டோம். பார்க்கும்போதே கன்களுக்குக் குளிர்ச்சியாய், மனதுக்கு இதமாய் இருந்தது. ஆனால் அதே மரத்தின் சில கிளைகள் வீட்டின் கூரையின் நிழலில் சூரிய வெளிச்சம் அதிகம் படாத இடங்களில் வளர்ந்தது. அங்கேயிருந்த பூக்களோ வாடிப்போய், வதங்கிப் போய் இருந்தது. அந்த பூக்களைப் பார்க்கும்போதே, அவைகள் நல்ல பழங்களைக் கொடுக்காது என்று எங்களுக்குத் தெரிந்தது. ஒரே வேரும், ஒரே அடிமரமும் இருந்தாலும், ஏன் இந்த வித்தியாசம்? அநேக கிளைகள் தினமும் சூரிய வெளிச்சத்தில் பிரகாசமடைந்தது. சில கிளைகளோ நிழலில் இருந்து கெட்டுப்போயின.

நம்முடைய குணாதிசயங்களும் கூட தேவையான வெளிச்சம் இல்லாமல் போனால், கெட்டுப் போகும். நாம் ஆவியின் கனியைத் தரவேண்டும் என்றால், தினந்தோறும் வேத வெளிச்சத்தில் வளரவேண்டும். இருண்ட இடத்தில், வேத வெளிச்சத்தில் வளராத கிளைகள் பயனற்ற கனிகளைத் தான் தரும்: பெலவீனங்கள், உபதேச குழப்பங்கள், வாழ்க்கையில் தேவனுடைய வழிநடத்துதல் இல்லாமல் அலைவது, நடைமுறை வாழ்க்கையில் ஒரு ஜெயம் இல்லாமல் இருப்பது, மற்றும் நம்முடைய நடத்தையில் சாட்சி இல்லாமல் இருப்பது போன்றவை வரும். ஆகவே நல்ல கனிகளை, அதினதின் காலத்தில் நாம் நேர்த்தியாக கொடுக்கும்படி, நம்முடைய முழு வாழ்க்கையையும், தேவனுடைய வேதத்தின் வெளிச்சத்திலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முகப்பிரகாசத்திலும், ஒன்றும் மறைக்காமல் விவரித்து வாழ்வோமாக.

ஆவியின் கனி

Advertisements