உண்மையுள்ள வாக்குத்தத்தம்

நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. – யோசுவா 1:5

எங்கள் பரலோக தகப்பனே! நாங்கள் உம்மை ஏற்றுக்கொண்ட நேரத்தில், அறியாதவர்களாய், திசை தெரியாதவர்களாய் இருந்தபோது, இந்த வாக்குறுதியை நீர் தந்தீர். உம்முடைய குமாரனும் எங்கள் இரட்சகருமான கிறிஸ்து இயேசுவுக்குள் நாங்கள் காலடி எடுத்து வந்தபோது, நான் உன்னைவிட்டு விலகமாட்டேன், உன்னைக் கைவிடவும் மாட்டேன் என்று எங்களுக்குச் சொன்னீர். இத்தனை வருடங்கள் கழித்து, நாங்கள் திரும்பிப் பார்க்கும்போது, நீர் உம்முடைய வார்த்தையில் எவ்வளவு உண்மையுள்ளவராய் இருக்கிறீர் என்பதை நினைத்து நாங்கள் சந்தோஷப்படுகிறோம்.

கர்த்தாவே, இந்த பாதையில், நாங்கள் அநேகந்தரம் உமக்கு உண்மையுள்ளவர்களாய் இல்லை; ஆனால் நீரோ உம்முடைய வார்த்தையில் எப்போதும் உண்மையுள்ளவராகவே இருக்கிறீர். சிற்சில வேளைகளில், உம்மை நாங்கள் மறந்து கூட போனோம். ஆனால், எங்கள் பரலோக தகப்பன் நீர், ஒருபோதும் எங்களையும் மறக்கவில்லை, எங்களுக்கு நீர் சொன்ன வாக்குத்தத்ததையும் மறக்கவில்லை. அதற்காக நாங்கள் உமக்கு நன்றி சொல்கிறோம். உமக்கு உம்முடைய குமாரனும், எங்கள் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் மகிமை செலுத்துகிறோம். ஆமென்.

யோசுவா 1_5

Advertisements

உமது நாமத்தை அறிந்தவர்கள்

உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள். – சங்கீதம் 9:10

எங்கள் இரட்சகரே, இயேசு கிறிஸ்துவே, நாங்கள் உம்முடைய நாமத்தை அறிந்திருக்கிறோம். உம்மையே நாங்கள் நம்பி இருக்கிறோம். ஆமென்.

நாமம்