கர்த்தர் தாமே…

கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம். – உபாகமம் 31:8

இந்த புதிய வருடத்திற்குள் வந்திருக்கிற நமக்கு கர்த்தர் சொல்கிறார்: நானே உனக்கு முன்பாகப் போவேன். உன் தடைகள், கோணல்கள், போராட்டங்கள் எல்லாம் என்னைத் தாண்டியே ஆகவேண்டும். நான் உன்னோடு இருப்பேன். நான் இம்மானுவேல். நான் உன்னை விட்டு விலகுவதில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. நீ பயப்பட வேண்டாம். நீ கலங்க வேண்டாம்.

ஆமென், தேவனுடைய பிள்ளையே, கர்த்தர் நமக்கு முன்பாகப் போகிறார். இயேசு நம்மோடு இருப்பார். அவர் நம்மை விட்டு விலகுவதில்லை, நம்மைக் கைவிடுவதுமில்லை. நாம் பயப்படவும் கலங்கவும் தேவையில்லை. இந்த புதிய வருடத்தில் கர்த்தர் நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நம்மையும், நம் குடும்பங்களையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

உபாகமம் 31_8

Advertisements

நீ யூதகுலமானால்…

“அவன் யூதகுலமானால், நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம்.”
– எஸ்தர் 6:13

நீங்கள் யூதகுலமா? யூத கோத்திரத்தைச் சேர்ந்தவர்களா? கர்த்தரைப் பாடி மகிமைப்படுத்துகிறவர்களா? உங்கள் சூழ்நிலைகள் எப்படிப்பட்ட நிலைமையில் இருந்தாலும், தேவனைப் பாடி துதிக்கிறவர்களா? ஒருவேளை இந்த நேரத்தில் கூட உங்கள் விரோதிகள் உங்களுக்கு விரோதமாய் திட்டங்கள் தீட்டிக்கொண்டிருக்கலாம். உங்கள் வளர்ச்சியைத் தடை செய்ய, உங்கள் பாதையில் தடைகற்களை அவர்கள் போட்டிருக்கலாம். ஒவ்வொரு நாளும் அவர்கள் பலத்துக் கொண்டே இருக்கலாம்; அவர்கள் செய்வது எல்லாம் வாய்க்கலாம். அது உங்கள் இருதயத்தைப் பயப்படுத்தலாம்.

ஆனால், திடங்கொள்ளுங்கள். கர்த்தரைத் துதியுங்கள். கர்த்தரை ஓயாமல் துதிக்கிற யூதாவின் கோத்திரமாய் நீங்கள் மாறுங்கள். நீங்கள் கர்த்தரைப் பாடி துதிக்கும்போது, எந்த எதிரியும் உங்களை மேற்கொள்ள முடியாது. அவர்கள் உங்களுக்கு முன்பாகத் தாழ்ந்து போவது நிச்சயம். ஏனென்றால், நம் மீட்பரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து, யூதா கோத்திரத்து சிங்கமாய் இருக்கிறார்; அவர் உங்களுக்கு விரோதமாய் இருக்கிற ஒவ்வொரு வல்லமையையும் ஜெயங்கொண்டிருக்கிறார். ஆகவே, அவரை துதியுங்கள்; இன்னும் அதிகமாய் மகிமைப்படுத்துங்கள்.

எஸ்தர் 6_13

2017–புது வருட வாக்குத்தத்தம்

கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.
– ஏசாயா 58:11

ஏசாயா 58_11

சங்கீதம் 18:18

என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.

1. ஒவ்வொரு தேவ பிள்ளைக்கும் ஆபத்து நாள் என்று ஒன்று உண்டு. அது உலக முடிவில் வரும்  நியாயத்தீர்ப்பின் நாள் அல்ல. இந்த உலகத்தில் எல்லாருக்கும் வருகிறது போல ஆபத்துகள் தேவனுடைய  பிள்ளைகளுக்கும் வரும்.

2. அந்த ஆபத்து நாளில் நமக்கு எதிரிடையாக ஒரு கூட்டம் கிளம்பும். ஒருவேளை நமக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் அந்த ஆபத்து நாளில் தான் உண்மையான நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்று நமக்குத் தெரிய வரும்.

3. அந்த நாளில் கர்த்தரே, கர்த்தாதி கர்த்தரே, சர்வ வல்லமையுள்ள கர்த்தரே, நமக்கு ஆதரவாய் இருப்பார்.

ஆகவே என் ஆபத்து நாளைக் குறித்து நான் கலங்குவதில்லை. எனக்கு எதிரிட்டு வரும் பகைஞர்களைக் கண்டு நான் பயப்படுவதில்லை. அந்த பகைஞர்களுக்கு முன்பாக, எனக்கு ஆபத்து வரவேண்டிய நாளில், கர்த்தர், கர்த்தர் மாத்திரம் எனக்கு ஆதரவாயிருக்கிறார் என்று எல்லாரும் அறியப் போகிறார்கள். அல்லேலூயா!

சங்கீதம் 18_18

ரோமர் 5:1

இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.

ஆமென். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் நாம் தேவனிடத்திலிருந்து சமாதானம் பெற்றிருக்கிறோம். ஏனென்றால் நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த நாட்களிலே, கிறிஸ்தவர்கள் தான் அதிகம் சமாதானம் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்கிறதை நாம் பார்க்கிறோம். அதிகப்படியான மனச்சோர்வும் (depression), அழுத்தமும் (pressure) சதவீத அளவில் கிறிஸ்தவர்களை தான் பிறரைக் காட்டிலும் அதிகமாகப் பாதித்துக்கொண்டிருக்கிறது. ஏன்? அதற்குப் பதில் – விசுவாசத்தினாலே நீதிமான்கள்.

நீங்கள் நீதிமான் என்று அறிந்திருக்கிறீர்களா? எப்படி நீதிமானாக்கப்பட்டோம் என்று தெளிவாக உங்களுக்குத் தெரியுமா? விசுவாசத்தினாலா, அல்லது உங்கள் கிரியைகளினாலா? கிறிஸ்து இயேசுவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையே விசுவாசிக்கிறீர்களா, அல்லது உங்கள் பரிசுத்த நடவடிக்கைகளில் நம்பிக்கை வைக்கிறீர்களா?

நாம் கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருந்தோமானால், தேவனுடைய சமாதானம் நம்மோடு தங்கியிருக்கும். ஏனென்றால் நம்முடைய பிதாவும், இயேசு கிறிஸ்துவினுடைய பிதாவுமாகிய தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கும் எவரையும் நேசிக்கிறார். அவர் தாமே கிருபாதார பலியாக இயேசு கிறிஸ்துவை எனக்காகவும் உங்களுக்காகவும் ஒப்புக்கொடுத்தார். அந்த பரிகாரியாகிய இயேசுவை விசுவாசிப்போம்; நீதிமான்களாவோம்; தேவனிடத்தில் இருந்து சமாதானத்தைப் பெற்றுக்கொள்வோம். ஆமென்.

ரோமர் 5_1

10. விசுவாசம்-கர்த்தர் தேவன்

கர்த்தர் தேவன். இதை உண்மையாக விசுவாசிக்க வேண்டும். இது தான் மெய்யான விசுவாசத்தின் அடிப்படை.

ஒருவேளை இது உங்களுக்குக் குழப்பமாக இருக்கலாம். இதை தானே நாம் விசுவாசிக்கிறோம் – கர்த்தரே தேவன் என்று. ஆனால், “கர்த்தரே தேவன்” என்று சொல்வதற்கும் “கர்த்தர் தேவன்” என்று சொல்வதற்கும் ஒரு சின்ன வித்தியாசம் உண்டு.

“கர்த்தரே தேவன்” என்று நான் சொல்லும்போது, பிற தெய்வங்களை ஒப்பிட்டுச் சொல்கிறேன். ஆனால் “கர்த்தர் தேவன்” என்று நான் சொல்லும்போது, வேறு எதோடும் நான் ஒப்பிடவில்லை. என் வாழ்க்கையில் கர்த்தர் தேவனாயிருக்கிறார் என்று அறிக்கை இடுகிறேன்.

அவரே சகலவற்றையும் படைத்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். சகலமும் அவருடைய அதிகாரத்துக்கு உட்பட்டு இருக்கிறது. வேதம் சொல்கிறது:  பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது, அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார். (சங்கீதம் 24:1-2) இதை நான் விசுவாசிக்கிறேன். அப்படி என்றால், உலகமும் அதிலுள்ள குடிகளும் அவருடையது என்று சொல்லும்போது, நான் அவருடையவன், நான் அவருடையவள் என்று நான் ஏற்றுக்கொள்கிறேன். அவருக்கு என்மேல் சகல அதிகாரமும் இருக்கிறது என்று ஏற்றுக்கொள்கிறேன்.

சங்கீதம் 24.1-2

கர்த்தர் தேவன். நான் அப்படி சொல்லும்போது, கர்த்தருடைய அதிகாரத்தை மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை; அவருடைய ஞானத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். கர்த்தர் சகலமும் அறிந்தவர்; என் எதிர்காலத்தைக் குறித்து அவர் அறிந்திருக்கிறார். அவருடைய வழி நடத்துதல்கள் எனக்குப் புரியாமல் இருக்கலாம், ஆனால் எனக்குக் குறித்ததை நிறைவேற்றுவார். பாருங்கள், யோசேப்புக்கு இரண்டு கனவுகள் காட்டினார். ஆனால் யோசேப்பின் வாழ்க்கையில் நடந்தது எல்லாம், அதற்கு எதிர்மறையான காரியங்களே. முடிவோ, யோசேப்பின் கனவுகள் நிறைவேறின; ஆனால் அவர் நினைத்ததைக் காட்டிலும் மேன்மையான காரியமாக நிறைவேறின. இன்று ஒருவேளை உன் வாழ்க்கை அப்படிப்பட்டதாக இருக்கலாம். உன் கனவுகள் நிறைவேற இனி வழியே இல்லை என்ற நிலைமை இருக்கலாம். ஆனால் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே உன்னை பெயர் சொல்லி அழைத்தவர் உன்னை ஒருபோதும் கைவிட மாட்டார் என்று உன்னால் நம்ப முடிகிறதா? உனக்கு அவர் தந்த தரிசனங்களை அவர் கண்டிப்பாக ஏற்ற காலத்தில் நிறைவேற்றுவார் என்று நம்ப முடிகிறதா? அவருடைய ஞானம் நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. சிற்சில வேளைகளில், நாம் எரிகிற அக்கினி சூளையின் நடுவே நடக்க வேண்டியது இருக்கும். அப்போதும், “கர்த்தர் தேவனாயிருக்கிறார்; அவர் தமக்கு சித்தமானதை என் வாழ்க்கையில் செய்கிறார்” என்று சொல்ல முடியுமா?

கர்த்தர் அறிவார்

ஒருவேளை அப்படி சொல்ல முடியாத நிலையில் நீ இருக்கலாம். கவலைப்படாதே. விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்து, உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு, உனக்காக இந்த வேளையில் மன்றாடிக்கொண்டிருக்கிறார். உன் விசுவாசத்தை அவர் பரிபூரணமாக்குவார்.