ஒரு தியானம், ஒரு தீர்க்கதரிசனம்

தினசரி தியானத்தில் இன்று, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு மிஷனரியாக வந்த ஜார்ஜ் போவன் அவர்களுடைய தியானத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். ஒரு சின்ன குழப்பம் வந்துவிட்டது – ஒருவேளை ஒரு சில வருடங்களுக்கு முன்பு தான் இது எழுதப்பட்டதோ என்று… பிறகுதான் ஞாபகம் வந்தது – இந்த தியானம் எழுதப்பட்டது 1880-ஆம் வருடங்களில் என்று. இது ஒரு தியானம் மாத்திரமல்ல, ஒரு தீர்க்கதரிசனமும் கூட. அவர் எழுதினதின் தமிழ் மொழிபெயர்ப்பு இதோ:

இந்த உலகம் கிறிஸ்துவை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது. எப்பொழுது இந்த உலகம் தன்னுடைய முதல் கட்டளையான “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை அறிக்கை இடாதிருப்பாயாக” என்று சொன்னதிலிருந்து, எப்படியாவது அவருடைய சீஷர்கள் இதை பின்பற்ற, எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறது.

முன்பு அக்கினியையும், கத்தியையும் தாராளமாகப் பயன்படுத்திப் பார்த்தது. ஆனால் இந்த நாட்களில், உலகத்தின் அணுகுமுறை ஒரு மிதமான அணுகுமுறையாக இருக்கிறது. நாகரிகமாக கிறிஸ்தவனை அணுகி, இந்த உலகம் சொல்லுகிறது: “கிறிஸ்தவத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய அருமையான காரியங்கள் நிறைய இருக்கிறது. அதை எல்லாம் நான் கற்றுக்கொள்ளாதது என் தவறு தான். இப்பொழுதும் நான் இதை எல்லாம் கற்றுக்கொள்ள ஆசையாய் இருக்கிறேன். உங்கள் பாதத்தில் அமர்ந்து, கிறிஸ்தவத்தைப் பற்றி நான் கற்றுக்கொள்ளட்டும்; அதற்கு பதிலாக, ஏதோ எனக்குத் தெரிந்த ஒரு சில காரியங்களை உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். இந்த வாழ்க்கையில் நாம் எல்லாரும் சமாதானமாக கையோடு கை பிடித்து நடக்கலாம்.

இந்த உலகம் சில காரியங்களையும் கற்றுக்கொள்கிறது – தேவ சபை சற்றே கண்ணயர்ந்து தூங்கும்படி. ஆனால், தேவசபையோ, ஐயகோ, உலகத்திடம் நிறைய கற்றுக்கொள்கிறது.

One thought on “ஒரு தியானம், ஒரு தீர்க்கதரிசனம்

Leave a comment